சுவாமிமலையில் இயற்கை வேளாண் போராளி நம்மாழ்வார் நினைவேந்தல்
நம்மாழ்வார் நினைவேந்தல் கருத்தரங்கம் சுவாமிமலை சுற்றுவட்டார உழவர்கள் சார்பாக நடைபெற்றது;
சுவாமிமலையில் இயற்கை காப்பு போராளி நம்மாழ்வார் நினைவேந்தல் கருத்தரங்கம் சுவாமிமலை சுற்றுவட்டார உழவர்கள் சார்பாக திருவலஞ்சுழி இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
சுவாமிமலை சுற்றுவட்டார உழவர்கள் நல்லதம்பி, அர்சுணன் சிங், பாரதிதாசன், மணிகண்டன், அய்யப்பன், சண்முகம், பாலசந்நர், சுரேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தமிழ் மரபு வழி வோளாண் நடுவம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கரும்பு கண்ணதாசன், செந்தமிழ் மரபுவழி வேளாண்மை நடுவம் அமைப்பாளர் முருகன், இயற்கை விவசாயிகள் ஏராகரம் சுவாமிநாதன், திருஞானம், உழவர் முன்னணி கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் வேல்முருகன், மணிமாறன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிகழ்வை விடுதலைசுடர், தீந்தமிழன் ஒருங்கிணைத்தனர். இளமுருகன் நன்றி கூறினார்.