சுவாமிமலை அருகே தாய் திட்டியதால் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சுவாமிமலை அருகே தாய் திட்டியதால் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்;

Update: 2022-03-27 15:15 GMT

சுவாமிமலை அருகே உள்ள மேலக்காவேரி தங்கம் நகரை சேர்ந்தவர் முகமது ரபிக். ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் ஹாலிக் (21) டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து தினசரி செல்போன் பார்த்து வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது தாய் பரக்கத் நிஷா சாப்பிட சொன்னதற்கு கோபப்பட்டு சென்ற மாணவர் ஹாலிக் தனது அறையின் உள்ளே சென்று பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகி வெளியே வராததால் அவரது குடும்பத்தினர் அறையை வெகு நேரமாகி தட்டி உள்ளனர். அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹாலிக் தூக்கிட்டுக்கொண்டது தெரிய வந்தது.

தகவலறிந்து சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடலை கொடுக்க மறுத்துள்ளனர். நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின்பு உடலை கைப்பற்றி கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் திட்டியதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News