கும்பகோணம் அருகே பானிபூரி குருமாவில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
கும்பகோணம் அருகே பானிபூரி குருமாவில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.;
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ரிஷி, (வயது2). இவரது தாய் அனுஷியா (28), தனது வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து தொழில் செய்கிறார். கணவர் கோவையில் வேலை செய்து வருகின்றார்.
கடந்த 27ஆம் தேதி மாலை பானி பூரிக்கு குருமா குழம்பு பாத்திரத்தை கீழே வைத்திருந்தபோது குழந்தை தவறி குழம்பில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கும்பகோணம் அம்மாசத்திரம் மிட்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.