சுவாமிமலையில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம்

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மனு அளித்தனர்

Update: 2021-12-16 16:30 GMT

சுவாமிமலை பேரூராட்சியில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது

சுவாமிமலை பேரூராட்சியில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில்,அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஹெச். ஜவாஹிருல்லா, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) தஞ்சாவூர் சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர் லதா, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

 பொதுமக்கள் கீழ்கண்ட கோரிக்களை நிறைவேற்ற மனு அளித்தனர்:  அரசினர் மேல்நிலைப்பள்ளி பழுதடைந்த கட்டிடங்களுக்கு மாற்றாக விளையாட்டு மைதானத்துடன் கூடிய புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தருமாறு பள்ளி மாணவர்கள், மாணவிகள் கேட்டுக் கொண்டனர்.

சுவாமி மலை பேரூராட்சி பொதுமக்கள் இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மழைநீர் வடிவாய்க்கால் தூர்வாருதல் போன்ற வசதிகள் செய்து தருமாறு மனுக்கள் அளித்தனர். மேலும் சர்வ மானிய தெருவில் உள்ள முராரி காலனி பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு வருவாய் கணக்கில் காலியிடம் என்று பதியப்பட்டுள்ளது. இதனால் இங்கு வசிக்கும் 20 குடும்பங்களுக்கு மேல் உள்ள மக்கள் பட்டா வாங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்த முகாமில் அனைவருக்கும் தனி பட்டா வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்சியில், பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன், தேவ. ஸ்ரீ கண்ட ஸ்தபதி, வழக்கறிஞர் விஜயகுமார், சுவாமிமலை பேரூராட்சி தன்னார்வலர்கள் டாக்டர் குணாளன், மதியழகன், குணசேகரன், கோபாலன், இக்பால், கேசவன், செங்குட்டுவன், அசோகன், சிவக்குமார், சிவதாஸ், கணேசன், முத்துக்குமரன், கோபால், சங்கர், கோபி, ராமச்சந்திரன், ராம்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை நன்றி கூறினார்.

Tags:    

Similar News