கும்பகோணம் சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலை சிறந்த நிறுவனமாக தேர்வு
கும்பகோணம் சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலை சிறந்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது;
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழக அரசின் கூட்டுறவு வார விழாவில் கும்பகோணம் சந்திர சேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மாநிலத்திலே சிறந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டு தொடந்து ஐந்தாவது முறையாக விருது வழங்கப்பட்டது. அமைச்சர் ஐ. பெரியசாமியிடமிருந்து பண்டகசாலை தலைவர் அயூப்கான் விருதை பெற்றுக்கொண்டார்.