கும்பகோணம் சக்கரபாணிசுவாமி கோயிலில் மாசிமக பெருவிழாவிற்கு பந்தக்கால்
கும்பகோணம் சக்கரபாணிசுவாமி கோயிலில் மாசிமக பெருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டது.;
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சக்கரபாணிசுவாமி கோயிலில் மாசிமக பெருவிழாவையொட்டி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.
மகாமகம் தொடர்புடைய கும்பகோணத்தில், புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான சக்கரபாணிசுவாமி கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மாசிமக பிரமோற்சவத்தையொட்டி பத்து நாள் உற்சவமும், தேரோட்டமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வரும் மாசிமக பெருவிழா வரும் பிப்ரவரி 16-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி சக்கரபாணிசுவாமி கோயிலில் பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதால், பக்தர்கள் இன்றி, கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் மட்டுமே பந்தக்கால் முகூர்த்த விழாவில் கலந்து கொண்டனர்.