கும்பகோணத்தில் தருமை ஆதீனம் எழுதிய நூல் வெளியீட்டு விழா

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், திருத்தலங்களைத் தேடி என்ற தருமை ஆதீனம் நூல் வெளியிடும் விழா நடைபெற்றது.

Update: 2021-12-21 01:15 GMT

தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருத்தலங்களைத் தேடி எனும் நுாலை வெளியிட்டார்.  

கும்பகோணத்தில்,  டிஆர்எம் அறக்கட்டளை சார்பில் நடந்த  நூல் வெளியிட்டு விழாவுக்கு, அறக்கட்டளை தலைவர் வைத்தியநாதன் வரவேற்றார். ஓதுவார்கள் திருமுறை பாடினர். நடன கலைஞர் உடுமலை செந்தில் பிரதோஷ தாண்டவம் நிகழ்ச்சி நடந்தது.

இதில், தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்  "திருத்தலங்களைத் தேடி"  எனும் நுாலை வெளியிட,  அதன் முதல் பிரதியை,  ஷீரடி அச்சுதானந்த சாய் பெற்றுக் கொண்டார். நூல் ஆசிரியர்கள் வனஜா, மைதிலி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து ஆண்டாள் சொக்கலிங்கம், இந்திய பண்பாட்டு அமைப்பு பேராசிரியர் கண்ணன், சேலம் சீனிவாசன், ஸ்ரீவில்லிபுத்துார் முனியப்பன், சூப்பர் யாத்ரா ஏஜென்சி சையதுசாதிக், ஆரணி பைரோஸ் அகமது, ஓய்வு பெற்ற அறநிலையத்துறை செயல் அலுவலர் பன்னீர்செல்வம், பெங்களூர் ராம்குமார், சென்னை நடராஜன், ஆனந்தம் இளைஞர் அமைப்பு செல்வக்குமார், குடந்தை புலவர் சந்திரசேகரன், பிரதோஷ நடன கலைஞர் உடுமலை செந்தில் ஆகியோருக்கு, அவர்களது பணியை பாராட்டி,  விருதுகளை தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் வழங்கினார்.

இதில்,  மயிலாடுதுறை சக்திவேல் சுவாமிஜி, ஹரிஓம் கங்கோத்திரி சுவாமிகள், கோப்பு நடராஜன் சுவாமிகள், தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில தலைவர் பண்ணை சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News