கும்பகோணத்தில் பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம்

கைத்தறி , விசைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசின் சலுகைகள் கிடைக்க தனியாக கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும்

Update: 2021-11-19 14:15 GMT

கும்பகோணத்தில் பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம் நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது

கும்பகோணத்தில்  பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம் நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில், பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், செயலாளர் சண்முகராஜா, நெசவாளர் பிரிவு மாநில துணைத்தலைவர்கள் உமாபதி, செல்வம், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சேகர் வரவேற்றார்.

கூட்டத்தில் 110 கோடி மக்களுக்கு விலையில்லா கொரோனா தடுப்பூசி வழங்கிய பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பது.  மத்திய பட்டு உற்பத்தி மையத்தை தமிழகத்தில் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்துவது, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசின் சலுகைகள் கிடைக்க தனியாக கூட்டுறவு வங்கி அமைக்க வலியுறுத்துவது  என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பாஜக நெசவாளர் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News