கும்பகோணத்தில் அரசு சமூக வானொலியின் நான்காம் ஆண்டு விழா
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில், அரசு சமூக வானொலியின் நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது.;
கும்பகோணம் அரசு இஞ்சினியரிங் காலேஜில், அரசு FM 90.4 சமூக வானொலியின் நான்காம் ஆண்டு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் சிறந்த சேவையாற்றிய மருத்துவர்கள், சமூக பணியாளர்கள், ஆசிரியர்கள், மொழி பற்றாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் மாணவர் விஜயராகவன் வடிவமைத்த சமூக வானொலியின் மென்பொருள் செயலி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரியின் தலைவர், ஆலோசகர், முதல்வர் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.