அலவந்திபுரம் ஸ்ரீசுந்தர மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

தஞ்சை அருகே அலவந்திபுரம் ஸ்ரீசுந்தர மகா காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

Update: 2021-08-27 10:55 GMT

அலவந்திபுரம் ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அருகே உள்ள அலவந்திபுரம் ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்துசாந்தி முதலியனவும், மாலை யாக சாலை பிரவேசம், யாகபூஜை ஹோமம், முதற்கால பூர்ணாகுதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை மங்கள இசை, யாகசாலை பூஜை ஹோமம், ஸ்பர்சாஹூதி, இரண்டாம் கால மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது.

அருள்மிகு சுந்தர மகாகாளியம்மன் விமான கும்பாபிஷேகமும், மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News