கொற்கை ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவருக்கு அதிமுக சார்பில் நிதியுதவி

கொற்கை ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது;

Update: 2021-11-27 15:00 GMT

அதிமுக கும்பகோணம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும் கும்பகோணம் நிலவள வங்கி தலைவருமான சோழபுரம் அறிவழகன் நேரில் சென்று தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணம் வழங்கினார்

கும்பகோணம் அருகே கொற்கை ஊராட்சியில் தங்கராசு என்பவர் வீடு மழையின் காரணமாக முற்றிலும் இடிந்து சேதமடைந்தது.

அதிமுக கும்பகோணம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும் கும்பகோணம் நிலவள வங்கி தலைவருமான சோழபுரம் அறிவழகன் நேரில் சென்று தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் குழந்தைவேலு, முன்னாள் ஊராட்சி செயலாளர் அன்பழகன், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் மீசை முத்துசாமி, ஒன்றிய மாணவரணி இணை செயலாளர் ரவிச்சந்திரன், மருதாநல்லூர் சீதாராமன், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் பிரபாகரன், ஐடி விங் ஒன்றிய பிரிவுச் செயலாளர் வெங்கடேசன், ஐடி விங் ஒன்றிய துணைச் செயலாளர் வேங்கை செந்தில், கிளை செயலாளர் கணபதி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News