52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகை 1971 ம்ஆண்டு காணாமல் போன பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள நடனபுரீஸ்வரர் கோயிலில் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-08 06:53 GMT

52 ஆண்டுகளுக்கு பிறகு நியூயார்க் ஏலமையத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள பார்வதி சிலை.

1971ம் ஆண்டு அதாவது  52 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து காணாமல் போன சிலையினை தற்போது அமெரிக்காவில் கண்டுபிடித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகேயுள்ள தாண்டந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது நடனபுரீஸ்வரர் கோயில் .இந்த கோயிலானது பழங்காலத்தில் கட்டப்பெற்றது. இதில் கடந்த 1971 ம் ஆண்டு அதாவது 52 ஆண்டுகளுக்கு முன்பாக இக்கோவிலில் இருந்து பார்வதி சிலை உட்பட 5 சிலைகள் திருடு போயின. இத்திருட்டுகுறித்து அப்போது நாச்சியார் கோயில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. சிலையை கண்டுபிடிப்பதில் பெரும்தாமதம் ஏற்படுத்தியது. இந்நிலையில் 2019 ம் ஆண்டு வாசு என்பவர் அளித்த புகாரின் பேரில் சிலை தடுப்பு போலீசார் இந்த வழக்கினை மீண்டும் துப்பு துலக்க ஆரம்பித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து மீண்டும் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

போலீசாரின் விசாரணையில் நடனபுரீஸ்வரர் கோயிலில் காணாமல் போன 5 சிலைகளும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் இதன் தொடர்ச்சியாக வெளிநாடுகளிலுள்ள மியூசியங்கள், ஏலமையங்களில் தீவிர கண்காணிப்பு விசாரணையினை மேற்கொண்டனர். மேலும் சோழர்காலத்து பார்வதி சிலை எங்காவது இருக்கிறதா? என தனிப்பட்ட விசாரணையில் இறங்கினர். மேலும் பாண்டியில் உள்ள இந்திய-பிரான்ஸ் கல்வி நிறுவனத்திற்குசென்று விசாரித்ததில் தாண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வரர்கோயிலில் இருந்து திருடுபோன பார்வதி சிலையின் உருவம் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியிலுள்ள போன்ஹோம்ஸ் ஏல இல்லத்தில் இருந்த பார்வதி சிலையோடு ஒத்து போனது.

மாநில தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய நிபுணரான ஸ்ரீதரனிடம் விசாரிக்கப்பட்டதும் பார்வதி சிலை நியூயார்க் ஏல இல்லத்தில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

தொலைந்து போய் மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ள பார்வதி சிலையானது செப்பு கலவையால் ஆனது. இது 12 ம் நுாற்றாண்டைச் சோ்ந்த சோழர்காலத்தைச் சேர்ந்தது. இதன் உயரம் 52 செ.மீ ஆகும். இதன் மதிப்பு ரூ.16 கோடியே 8 லட்சத்து 26 ஆயிரத்து 143 ஆகும்.

1971 ம் ஆண்டு காணாமல் போன பார்வதி சிலையினை அமெரிக்க நியூயார்க் ஏல இல்லத்தில் இருந்து மீ்ட்டு இந்தியாவிற்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சிலையோடு மேலும் 4 சிலைகள் அன்றைய தினம் திருடு போயின. அதனையும் கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்கா நியூயார்க் ஏல இல்லத்தில் இருந்து பார்வதி சிலையை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவுக்கு மீட்டு வந்த உடன் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் கோவிலுக்கு சிலை கொண்டு வரப்படும். மேலும் திருடுபோன மற்ற 4 சிலைகளையும் தேடும் பணி நடந்து வருகிறது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.ஸ்காட்லாந்துக்கு இணையான தமிழக போலீசார் இதனையும் கண்டுபிடித்துவிடுவார்கள்  என காத்திருப்போம். 

Tags:    

Similar News