திருவலஞ்சுழியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

திருவலஞ்சுழியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-05-10 23:30 GMT

தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்ஜிஎம். சுப்பிரமணியன், தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். 

கும்பகோணம் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில்,  திருவலஞ்சுழி ஊராட்சியில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா, ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,  ஒன்றிய கவுன்சிலர் சுப்பு. அறிவழகன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக, தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்ஜிஎம். சுப்பிரமணியன் கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, தர்பூசணி, நீர்மோர், விசிறி ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவலஞ்சுழி அதிமுக நிர்வாகிகள் சுப்பு மதியழகன், இளங்கோவன், சாந்தி செல்வராஜ், அசோக்குமார், செல்வம், கணேசன், மாரிமுத்து, ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News