விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி குடந்தையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு மழை நிவாரணம் வழங்கக்கோரி கும்பகோணத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக பெருநகர செயலாளர் ராம.ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், செந்தில் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.