கும்பகோணம்: கோவிலாச்சேரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் பலி
கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.;
கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி கிராமம் கைகாட்டி பகுதி, அழகிரிநாதன் பேட்டையை சேர்ந்த ரவி மகன் ஐயப்பன் (22) மற்றும் உத்தமதாணி ஊருடையாநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன் கௌதமன் (22) ஆகிய இருவரும் சோழபுரத்தில் இருந்து அணைக்குடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர்.
அப்போது, எதிரே கும்பகோணத்திலிருந்து அவ்வழியாக வந்த டாடா ஏசி வாகனத்தின் மீது எதிரெதிரே மோதிக்கொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். கௌதமன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்பட்டதும் வாகன ஓட்டுனர் தப்பி சென்றுவிட்டார். சோழபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.