கும்பகோணம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன் தனிநபர் தர்ணா போராட்டம்
கும்பகோணம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன் தனிநபர் நடத்திய தர்ணா போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.;
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் இந்திராகாந்தி வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு நடப்பதாகவும், அதே ஊராட்சியில் குடிநீர் பைப்லைன் போடுவதில் முறைகேடு நடப்பதாகவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் கீழமராயன் கலியமூர்த்தி கும்பகோணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த தகவல் கும்பகோணம் கிழக்கு காவல் துறையினருக்கு கிடைத்தவுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு அண்ணா திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் கீழமராயன் கலியமூர்த்தியை அழைத்துச் சென்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.