சுவாமிமலை பேரூராட்சியில் 79 சதவீதம் வாக்குப்பதிவு

நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் சுவாமிமலை பேரூராட்சியில் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது;

Update: 2022-02-20 01:45 GMT

சுவாமிமலை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் மொத்தம் 6534 வாக்குகளில் 5190 வாக்குகள் பதிவாகின. இதன்படி 79% வாக்காளர்கள் வாக்களித்து உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா தெரிவித்தார்.

சுவாமிமலை பாலலட்சுமி உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கு வாக்குச்சாவடி வாக்களிக்க வந்த ஊனமுற்றோர் நபரை சுவாமிமலை பேரூராட்சி பணியாற்றும் தன்னார்வலர்கள் வாக்களிக்க அழைத்து சென்று உதவி செய்தனர்.

மேலும் சுவாமிமலை பேரூராட்சியில் மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் டிஎஸ்பி அசோகன், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரம் வாக்கு எண்ணும் இடமான கும்பகோணத்தில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Tags:    

Similar News