கும்பகோணம் அருகே வேப்பத்தூர் அரிவாள் வெட்டு பிரச்சினையில் 4 பேர் கைது

கும்பகோணம் அருகே வேப்பத்தூரில் நடந்த அரிவாள் வெட்டு பிரச்சினையில் போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

Update: 2022-04-21 04:33 GMT

கும்பகோணம் அருகே வேப்பத்தூரில் வசிப்பவர் ராஜமாணிக்கம் மகன் ராஜதுரை (30). இவர் 5வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவருக்கும் கும்பகோணம் அறிஞர் அண்ணா கூட்டுறவு நகரை சேர்ந்த செல்வம் மகன் ராஜேஷ்கண்ணன் (22) மற்றும் வேப்பத்தூர் கள்ளர்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சீனிவாசன் (23) ஆகியோருக்கும் கடந்த சில நாட்களாக ஒரு இடப்பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ராஜதுரைக்கும், சீனிவாசனுக்கும் சீனிவாசனின் வீட்டு மாட்டுக் கொட்டகையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் சீனிவாசனின் மாட்டுக் கொட்டகையில் ராஜதுரையின் கூட்டாளிகளான நடுவக்கரையை சேர்ந்த ரவி மகன் சரவணன் (25), வேப்பத்தூர் தெற்கு அக்ரஹார தெருவை சேர்ந்த முருகேசன் மகன் கோகுலகிருஷ்ணன் (21), கள்ளர் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் சிவா (24) மற்றும் பத்தார தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் எத்திராஜ் (19) ஆகியோர் சீனிவாசன் ஆகியோர்  ராஜேஷ் கண்ணனை மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ராஜேஷ் கண்ணனுக்கு இடது பக்க தலையில் வெட்டு காயமும், இடது பக்க கை விரலில் பலத்த வெட்டு காயமும் ஏற்பட்டது. அதுபோல சீனிவாசனுக்கு வலது மற்றும் இடது கை விரல்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.



 




 



இதனைத் தொடர்ந்து இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிந்து மேற்படி குற்றவாளிகளை கைது செய்தனர்.

Tags:    

Similar News