கும்பகோணத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

கும்பகோணத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது;

Update: 2022-01-30 11:45 GMT

கும்பகோணம் நால்ரோடு பைராகி தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சபரி வாசன் (19). அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ராஜா (24). கும்பகோணம் சிவகுருநாதன் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஸ்ரீநாத் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்புரோஸ் மகன் ஆகாஷ் (19). இவர்கள் நான்கு பேர் மீதும் கொலை வழக்கு உள்ளது.

இதையடுத்து இவர்கள் நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பெயரில் சபரிவாசன், ராஜா, ஆகாஷ், ஸ்ரீநாத் ஆகிய 4 பேரையும் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆடலரசன் என்பவரை ஏற்கெனவே போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News