ஜெகநாத பெருமாள் கோயிலில் 30 வது ஆண்டு வருடாந்திர பவித்ரோத்சவ விழா

கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோயிலில் 30வது ஆண்டு வருடாந்திர பவித்ரோத்சவ விழா இன்று கொண்டாடப்பட்டது.

Update: 2021-07-27 12:39 GMT

பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெகநாத பெருமாள்.

கும்பகோணம் அருகேஉள்ள  நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோயிலில், கடந்த 24ம் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் உற்சவம் நடந்தது. தினமும் சேவா காலம், வேத பாராயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், சாற்றுமுறை, பஞ்சசூக்த ஹோமம், மூலவர், உற்சவர் திருமஞ்சனம், உற்சவர் பெருமாள் ஏகாந்த சேவையாக உள்பிரகார புறப்பாடு நடந்தது. இதனையடுத்து  4வது நாளாக இன்று நடைபெற்ற உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வானமாமலை ஜீயர் மடம், ஜெகநாத பெருமாள் கைங்கர்ய சபா, காரிமாறன் கலை காப்பகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.



Tags:    

Similar News