இறந்த நிலையில் புள்ளிமான் மீட்பு

அதிராம்பட்டினத்தில் இறந்த நிலையில் புள்ளிமான் மீட்பு;

Update: 2021-02-28 15:45 GMT

அதிராம்பட்டினம் அருகில் உள்ள தொக்காலிக்காடு கிராமத்தில், நேற்று மாலை கீழக்காடு பகுதியில் ஆண் புள்ளிமான் ஒன்று சந்திரசேகர் மகன் பாலசுப்பிரமணியம் என்பவரின் தோப்பில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சென்று பார்த்தனர். இது பற்றி கிராம நிர்வாக அதிகாரிக்கு  தகவல் கொடுத்தனர். இதனையடுத்து இறந்த மானை மகிழங்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு கால்நடை மருத்துவருக்கும், வனத்துறை அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்தார்.  அதன் பின் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பப்பட்டது.  

Tags:    

Similar News