சீர்காழி கொலையில் முக்கிய குற்றவாளி கும்பகோணத்தில் கைது
சீர்காழி இரட்டை கொலையில் முக்கிய குற்றவாளி கும்பகோணத்தில் கைது;
தஞ்சாவூர் கும்பகோணத்தில் இரவு மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் காரில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முதலில் இந்தி மொழியிலும் பின்னர் தமிழிலும் பேசினார்.
விசாரணையில் சீர்காழி கொலையில் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. பணத்துக்காக இரட்டை கொலையை செய்ததாக போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கருணாராம் (38) கடந்த 20 ஆண்டுகளாக கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் வாடகைக்கு குடியிருந்து வருவதும், கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரில் செருப்புக்கடை வைத்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கருணாராம் தான் மற்ற 3 பேரையும் தனது காரில் சீர்காழிக்கு அழைத்துச் சென்றதை போலீசில் ஒப்புக்கொண்டார். எனவே இரட்டை கொலை வழக்கில் கருணாராம் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.