மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம்:

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு, இலவச பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மார்ச் 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெறுகிறது

Update: 2023-03-19 03:30 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி

வருகின்ற 30.03.2023 அன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் 31.03.2023 அன்று மற்ற வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயணச்சலுகை அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது -

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்திடவும், பல்வேறு துறைகளுடன் ஒன்றிணைந்து பல நலதிட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

அவ்வகையில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி, மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த பணிகளுக்காக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவ்வழிதடங்களுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை அட்டை வழங்கி வருகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மேற்படி காரணங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயணச்சலுகை அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற 30.03.2023 அன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் மற்றும் 31.03.2023 அன்று மற்ற வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பேருந்து பயணச்சலுகை அட்டை புதிதாகவும் மற்றும் பழைய அட்டையினை புதுப்பித்து வழங்கப்படவுள்ளது.

மேற்படி சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல்-1, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வாக்காளர் அட்டை நகல், பணிபுரியும் நிறுவன சான்று, கல்வி நிறுவனம் சான்று சுயதொழில் சான்று, கடந்த நிதியாண்டு பெற்ற பேருந்து பயணச்சலுகை அட்டை அசல் போன்ற சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.

மேற்காணும் சான்றுகளுடன் சிவகங்கை மாவட்டத்தினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர் மற்றும் பெற்றோர் மேற்காணும் நாட்களில் விண்ணப்பித்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News