பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கவுரவித்தார்.

Update: 2024-10-15 09:15 GMT

மாணவ்களிடம் குறை கேட்டறிந்த  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

சிவகங்கை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மொத்தம் 32 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்குபரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்களையும் மற்றும் மாவட்ட அளவிலான பாரம்பரிய உணவு திருவிழாவில் வெற்றி பெற்றமகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 290 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார்.

மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 32 மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/-மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், இதுதவிர அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான சிறப்புப்பரிசாக ரூ.2,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பங்கேற்ற 12 வட்டாரத்தை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களில் வெற்றி பெற்று ,முதலிடம் பெற்ற மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு முதல் பரிசாக ரூ.5,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், இரண்டாம் பரிசாக ரூ.4,000/-மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், மூன்றாம் பரிசாக ரூ.3,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.2,500/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும்,  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குதலா ரூ.2,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், 04 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.

முன்னதாக, கூட்டுறவுத்துறையின் சார்பில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் பொறியியல் துறையின் பங்களிப்புடன் ” கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம்” அமைக்கும் திட்டத்தின் கீழ் என்.என்.630 கொம்புக்காரனேந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் என்.என்.559 கழுவன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரூ.24,40,206/- மதிப்பீட்டில் ரூ.16,00,000/- மானியத்துடன் கொள்முதல் செய்யப்பட்ட டிராக்டர்கள் மற்றும் ரொட்டவேட்டார்களை, விவசாயிகளின் பயன்பாட்டிற்கெனமாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதலமைச்சர் கோப்பை-2024க்கான விளையாட்டு போட்டிகள் தொடர்பாக மாநில அளவில் மதுரை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வசுரபி, இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், மகளிர் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சித்துறை) ச.சீதாலெட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News