சிவகங்கையில் அக்டோபர் 5ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கையில் அக்டோபர் 5ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2024-10-04 08:00 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 05.10.2024 அன்று சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, வருகின்ற 05.10.2024 அன்று அரசு மகளிர் கலைக் கல்லூரி, காஞ்சிரங்கால், சிவகங்கை -630 562 (பேருந்து நிறுத்தம்: காஞ்சிரங்கால்) என்ற முகவரியில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 3000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில், கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரம் (Resume), கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 09.00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் https://tinyurl.com/svgcandidatereg என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம் முகாமில் பங்கேற்க உள்ள தனியார்துறை நிறுவனங்கள் https://tinyurl.com/svgempreg என்ற இணைப்பில் பதிவு செய்வது அவசியமாகும்.

மேலும், தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் (www.tnprivatejobs.tn.gov.in) வேலைநாடுநர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பெற SIVAGANGAI EMPLOYMENT OFFICE என்ற Telgram channel-ல் இணைந்து பயன்பெறலாம். இம்முகாமில் வேலைவாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு இரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில், போட்டித்தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம், பல்வேறு திறன் பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவைகளும் வழங்கப்படும்.

எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுநர்கள் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், அதிக அளவில் பங்கேற்று பயன்பெறலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News