சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்

காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்;

Update: 2022-06-08 12:59 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம், காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், ரூ.24.77 கோடி செலவில் 44 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.119.68 கோடி மதிப்பீட்டிலான 127 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 59,162 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திறந்து வைக்கப்பட்ட பணிகளின் விவரங்கள்

  • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சாக்கோட்டை வட்டாரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்;
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாகனேரி ஆதிதிராவிடர் நல சமுதாயக்கூடம், மல்லல் ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறைக் கட்டடங்கள், அதிகரம் ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் 2 வகுப்பறைக் கட்டடங்கள் என 1 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் 4 பணிகள்;
  • பால்வளத்துறை சார்பில் சக்கந்தி ஊராட்சியில் 30 இலட்சம் ரூபாய் செலவில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிர்விப்பு நிலையம்
  • பொதுப்பணித்துறை சார்பில் திருப்புவனத்தில் 88 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்நிலை கருவூலக் கட்டடம்
  • பேரூராட்சிகள் துறை சார்பில் 5 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் திருப்பத்தூரில் செம்மொழிப் பூங்கா மற்றும் வாரச் சந்தை மற்றும் சிங்கம்புணரியில் வாரச்சந்தை
  • கூட்டுறவுத்துறை சார்பில் முத்துப்பட்டி மற்றும் கே. பெத்தனேந்தல் ஆகிய இடங்களில் 45 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்
  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) சார்பில் ரூர்பன் திட்டத்தின் கீழ் 97 இலட்சம் ரூபாய் செலவில் அரசனி முத்துப்பட்டி ஊராட்சியில் ஒருங்கிணைந்த தொழிற்கூடம் மற்றும் சிவகங்கை மஜீத் சாலையில் மகளிர் சந்தை
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தஞ்சாக்கூர், இடையமேலூர், பூவந்தி, சண்முகநாதபுரம், நெற்குப்பை மற்றும் தமராக்கி ஆகிய இடங்களில் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள்
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் 5 கோடியே 82 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அ. காளாப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 33.11 கிலோ வாட் துணை மின் நிலையம்;
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், காரைக்குடி நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 24 குடியிருப்புகள்;

வாணியங்குடி ஊராட்சியில் நீர்தேக்க தொட்டி, அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் பாதுகாப்பு மையம், வணிகக் கட்டடம்,

காஞ்சிரங்கால் ஊராட்சியில் 2 விளைபொருள் உற்பத்தி பல்நோக்குக் கட்டடம்,

குடஞ்சாடி, பசியாபுரம், ஆங்குடிவயல், காப்பாராப்பட்டி ஆகிய இடங்களில் அங்கன்வாடி மையங்கள்,

கோமாளிப்பட்டி, மேலராங்கியம் ஆகிய இடங்களில் உணவு அருந்தும் கூடம்,

டி. பறையன்குளம், ஒப்பிலான்பட்டி ஆகிய இடங்களில் நியாயவிலைக் கடைகள்,

அலவாக்கோட்டையில் சமுதாயக்கூடம்,

கொந்தகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்,

வல்லாரேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2 வகுப்பறைக் கட்டடம்,

சிவகங்கையில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையக் கட்டடம் உள்ளிட்ட 3 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவிலான 22 பணிகள்  என மொத்தம், ரூ.24.77 கோடி செலவில் 44 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 4 ஊராட்சி ஒன்றிய அலுவலக் கட்டடங்கள், 19 ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள், 6 அங்கன்வாடி மையக் கட்டடங்கள், 5 பால் உற்பத்தி மையக் கட்டடங்கள், 4 உணவு தானிய கிடங்குகள், 4 பள்ளி சமையலறை கட்டடங்கள், 22 சாலைப் பணிகள், 6 பாலங்கள், சமுதாய நலக்கூடம், நியாய விலைக் கடை கட்டடம், பள்ளி வகுப்பறைக் கட்டடம் என 42 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 69 திட்டப் பணிகள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முத்தனேந்தலில் வட்டார பொது சுகாதார மையக் கட்டடம், புளியால்பருத்தியூரில் துணை சுகாதார நிலையக் கட்டடம், தெற்கு இளையாத்தன்குடியில் துணை சுகாதார நிலையக் கட்டடம், பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார மையக் கட்டடம், மாரநாடு கிராமத்தில் துணை சுகாதார நிலையம், என 1 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 திட்டப் பணிகள்

நீர்வளத் துறை சார்பில் திருப்பத்தூர் வட்டம், மாதவராயன்பட்டி கிராமத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டும் பணி;

நெடுஞ்சாலைத் துறை சார்பில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் காயாஓடையில் 4 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்ட பாலம், 63 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 26 சாலைப் பணிகள், 18 சிறு பாலம் கட்டும் பணிகள், 7 வேகத்தடை மற்றும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள்;

என மொத்தம் ரூ.119.68 கோடி மதிப்பீட்டிலான 127 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள்

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள், சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்,  முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், வங்கி பெருங்கடன், சமுதாய முதலீட்டு நிதி, தனிநபர் கடன்கள், மகளிர் சுயதவிக்குழுக்கடன், வேளாண்மை கூட்டுறவுக்கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், சிறுவணிகக்கடன், தனிநபர் பண்ணைக்குட்டை அமைத்தல், உறிஞ்சும் குழி அமைத்தல், பிரதமர் குடியிருப்புத் திட்டத்தின் வீடுகள், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 59,162 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு,  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எஸ். இரகுபதி, கேஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார், எஸ்.மாங்குடி, ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப. மதுசூதன் ரெட்டி, உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News