போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவை என்ற நிலையில், தற்போது 2 கோடியே 80 இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Update: 2021-08-22 10:32 GMT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா, சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

தமிழகத்தில் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்.

காரைக்குடியில் புதிய மருத்துவமனையில் 50 லட்சம் மதிப்பிலான 6000 லிட்டர் திரவ ஆக்சிசன் சேமிப்புக் கலனை துவக்கி வைத்த பின்னர்  செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: 

தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் கட்டிட தரம். குறித்து தர வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடந்து வருகிறது. ஏதேனும் முறைகேடு நடந்திருந்தால், தவறு செய்தவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் . 17,940 ஆக்ஜிஸன் செறிவூட்டிகளை தனியார்கள் மூலம்   வழங்கப்பட்டுள்ளது. அது தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவை என்ற நிலையில், தற்போது 2 கோடியே 80 இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.  இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குரிய 15 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் செயல்பட்டுவரும் நிலையில், மேலும், 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறியவர்,தமிழகத்தில் மாநகராட்சி மருத்துவமனைகள் போன்று நகராட்சி அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News