செல்போன் டவரில் நின்று தற்கொலை மிரட்டல் வாலிபருக்கு போலீசார் எச்சரிக்கை

காரைக்குடியில் செல்போன் டவரில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.;

Update: 2021-12-30 05:47 GMT

டவரில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி.

காரைக்குடியில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய வாலிபர் நீண்ட நேரத்திற்கு பிறகு கீழே இறங்கினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கட்டிட வேலை செய்து வரும் இவர், இன்று மாலை 6 மணி அளவில் அம்பேத்கர் சிலை அருகே 120 அடி உயரம் கொண்ட தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டினார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி வியாபாரிகள், காரைக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடம் வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்து வரவழைத்தனர். தகவல் அறிந்த அவரது உறவினர்களும் சம்பவம் இடம் வந்து முருகனை கீழே இறங்க கூறி போராடினர். இதற்கிடையே, அப்பகுதியில் இக்காட்சியை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முருகன் தானாக கீழே இறங்கி வந்தார். அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டதில், முருகன் குடி போதையில் இதுபோன்று 6முறை செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. முருகனை கடுமையாக எச்சரித்த போலீஸ் , அவரது உறவினர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்

Tags:    

Similar News