நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் பார்த்த மாணவர்கள்

திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும், பக்கத்தில் நிழலாக தெரியாததை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Update: 2021-04-15 13:27 GMT

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்த்து அதன் அறிவியல் விவரங்களை தெளிவாக புரிந்து கொண்டனர்.

நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ஆகியோர் இணையம் வழியாக மாணவர்களுக்கு கொடுத்த தகவலில், ''பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும். சூரியனின் கதிர்கள் அட்ச ரேகைக்கு சமமாக மாறும் போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரிய கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும் . அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும். இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் இம் மாதம் ஏப்ரல் 15ம் தேதி நிகழும். தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளில் 12 மணி 15 நிமிடங்களில் நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது" என்று கூறியதை அடுத்து மாணவர்கள் அந்த நிகழ்வை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.


Tags:    

Similar News