காரைக்குடியில் முதல்வர் திறந்த சார்-பதிவாளர் அலுவலகம் பயன்பாட்டுக்கு வந்தது
காரைக்குடியில் முதல்வர் திறந்த சார்-பதிவாளர் அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பதிவாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் காணொலிக்காட்சியின் வாயிலாக திறந்து வைத்ததை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் முன்னிலையில், புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
சார் பதிவாளர் அலுவலகமானது தரைத்தளம் மற்றும் முதல்தளம் முதல் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகம் நிலை-1, மாவட்ட பதிவாளர் அலுவலகம், பதிவறை அறை, கணினி அறை, ஆவணக்காப்பக அறை மற்றும் கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி ஆகியவை இணைந்து 483.80 சதுர மீட்டர் பரப்பளவிலும், முதல்தளத்தில் இணை சார்பதிவாளர் நிலை-2 அலுவலகம், கணிணி அறை, பதிவுரு அறை, கழிப்பிட அறை போன்றவற்றுடன் 287 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடமானது, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் ஏற்கனவே, இருந்த இட நெருக்கடியை தவிர்க்கப்பட்டு விசாலமான இடவசதியுடன் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லவும், தேவையான அடிப்படை இடவசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், காணொலிக்காட்சியின் வாயிலாக இன்று திறந்து வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்நிகழ்வின் போது, காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சரண்யா செந்தில்நாதன், மதுரை பத்திரப்பதிவுத்துறை துணைப்பதிவாளர் மு.ஜெகதீசன், பொதுப்பணித்துறை உதவிசெயற் பொறியாளர் சி.கண்ணன், மாவட்ட பதிவுத்துறை அலுவலர் தே.லலிதா, நகர்மன்றத் துணைத்தலைவர் என்.குணசேகரன், உதவிப்பொறியாளர் சொ.முத்துஜெயம், நகர்மன்ற உறுப்பினர் அமுதா சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.