சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர்கள் சுயதொழில் கடனுதவி பெற சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர்கள் சுயதொழில் கடனுதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

Update: 2022-07-24 08:30 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஏற்கனவே ,தொழில் செய்யும் தொழில் முனைவோர்களை மேம்படுத்துதல், திறன்வளர்ப்பு பயிற்சியளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல் மற்றும் தொழிலுக்கு தேவையான நிதி சேவைகளுக்கு வழிவகுத்து வருமானத்தை பெருக்குதல் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டம், சிவகங்கை மாவட்டத்டதில் காளையார்கோவில், மானாமதுரை மற்றும் தேவகோட்டை ஆகிய 3 வட்டாரங்களைச் சார்ந்த 124 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இத்திட்டத்தின் ஒருபகுதியாக, படித்த மற்றும் படிக்காத வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் சுயதொழில் செய்ய ஆர்வம் இருந்தும் நிதி வசதி இல்லாத இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான திறன்வளர்ப்பு பயிற்சியளித்து, அவர்கள் கற்றுக்கொண்ட தொழிலை சுயமாக துவங்க தேவையான நிதியினை அனைத்து அரசு துறைகள் மூலம் செயல்படுத்தி வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே செய்யும் தொழிலை மேம்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கு கடன் உதவி பெற உதவும் வகையில் வட்டார அளவில் கடன் விண்ணப்பம் பெறும் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமானது, மானாமதுரையில் 27.07.2022 அன்றும், காளையார்கோவிலில் 28.07.2022 அன்றும், மற்றும் தேவகோட்டையில் 29.07.2022 ஆகிய நாட்களில் காலை 9.30 மணிக்கு துவங்கவுள்ளது. அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த முகாமில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளையும் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும் ,மாவட்ட செயல் அலுவலர்: 93852 99721, தேவகோட்டை வட்டார அலுவலர், 63827 80598, காளையார்கோவில் வட்டார அலுவலர், 88838 72423, மானாமதுரை வட்டார அலுவலர் :96778 89662, 86681 42389 ஆகிய தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் (ஆண், பெண்) விண்ணப்பத்துடன் போட்டோ 2, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பான் அட்டை நகல், வங்கிப்புத்தகம் நகல் மற்றும் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News