சிவகங்கை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு: உறுப்பினர், ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு நடைபெற்ற மையத்தை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக்குழு உறுப்பினர் ஏ.வி.பாலுச்சாமி ஆய்வு;

Update: 2022-07-24 08:00 GMT

 காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தினை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக்குழு உறுப்பினர் ஏ.வி.பாலுச்சாமி , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

சிவகங்கை மாவட்டத்தில் குரூப் 4தேர்வு நடைபெற்ற மையத்தினை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக்குழு உறுப்பினர் ஏ.வி.பாலுச்சாமி , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய தொகுதி -4 தேர்விற்காக காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தினை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக்குழு உறுப்பினர் ஏ.வி.பாலுச்சாமி , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்கு பின், மாண்புமிகு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக்குழு உறுப்பினர்: தெரிவிக்கையில்,தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-4-க்கான தேர்வானது, காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.

சிவகங்கை வட்டத்தில், 38 மையங்களில் தேர்வு எழுத 9,069 நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 7,602 (84) தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்றனர். 1,462 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தேவகோட்டை வட்டத்தில் 12 மையங்களில் தேர்வு எழுத 3,922 நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 3,231 (82) தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்றனர். 691 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இளையான்குடி வட்டத்தில் 9 மையங்களில் தேர்வு எழுதிட 2,555 நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 2,209 (86) தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்றனர். 346 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. காளையார்கோவில் வட்டத்தில் 14 மையங்களில் தேர்வு எழுதிட 3,342 அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 2,824 (85) தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்றனர். 518 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

காரைக்குடி வட்டத்தில் 34 மையங்களில் தேர்வு எழுதிட 10,275 நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 8,295 (81) தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்றனர். 1,980 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. மானாமதுரை வட்டத்தில் 21 மையங்களில் தேர்வு எழுதிட 4,828 நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 4,227 (88) தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்றனர். 601 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. சிங்கம்புணரி வட்டத்தில் 6 மையங்களில் தேர்வு எழுதிட 1,547 நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 1,342 (87) தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்றனர். 205 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. திருப்புவனம் வட்டத்தில் 16 மையங்களில் தேர்வு எழுதிட 4,399 நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 3,913 (89) தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்றனர். 486 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. திருப்பத்தூர் வட்டத்தில் 9 மையங்களில் தேர்வு எழுதிட 2,438 நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 2,075 (85) தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்றனர். 363 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் 159 பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்விற்கு விண்ணப்பித்திருந்த 42,375 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 35,723 (84) தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 6,652 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்கு வந்து செல்ல தேவையான போக்குவரத்து வசதிகள், தடையில்லா மின்வசதி, காற்றோட்டமான தேர்வு அறை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மேற்கொள்ளப்பட்டு இருந்தது. ஒளிவுமறைவற்ற முறையில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் நேர்மையான முறையில் தேர்வு நடைபெற்றது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக்குழு உறுப்பினர் ஏ.வி.பாலுச்சாமி, தெரிவித்தார்.ஆய்வின்போது, காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உபட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்கு வந்து செல்ல தேவையான போக்குவரத்து வசதிகள், தடையில்லா மின்வசதி, காற்றோட்டமான தேர்வு அறை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மேற்கொள்ளப்பட்டு தேர்வாளர்கள் எவ்வித இடர்பாடின்றி தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

Tags:    

Similar News