துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் அதிகாரம்: காங்கிரஸ் எம்பி வரவேற்பு

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்க அதிகாரம் என்ற சட்ட மசோதாவுக்கு சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் வரவேற்பு;

Update: 2022-04-27 03:15 GMT

சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திசிதம்பரம்

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்க அதிகாரம் என்ற சட்ட மசோதாவை  வரவேற்பதாக சிவகங்கை எம்பி  கார்த்தி சிதம்பரம் பேட்டி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் துணை பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்து வைத்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம்  மேலும் கூறியதாவது: ஆளுநரின் தன்னிச்சை போக்கை தடுக்கும் விதமாகவே தமிழக சட்டமன்றத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தியா கொடுக்கும் நிதி உதவியை இலங்கை தன்னிச்சையாக செலவழிக்க கூடாது அதற்கென இந்தியாவிலிருந்து மூன்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும். காவல் நிலைய துன்புறுத்தல் மரணங்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் காவல்துறை துன்புறுத்தலால் மரணம் அடைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வழக்கை முறையாக விசாரணை நடத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றார் கார்த்திசிதம்பரம். 

Tags:    

Similar News