காரைக்குடி அருகே வயதான தம்பதியிடம் நகை, பணம் திருடிய நபர்கள் கைது

வீட்டில் வேலை பார்த்த பெண்ணைப்பிடித்து விசாரணை நடத்தியதில் வயதான தம்பதியை கட்டிப் போட்டு திருடியதை ஒப்புக்கொண்டார்;

Update: 2021-11-28 06:15 GMT

காரைக்குடி அருகே வயதான தம்பதியை கட்டிப் போட்டு நகை, பணத்தை திருடிய குற்றவாளிகள் எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர்

காரைக்குடி அருகே வயதான தம்பதியை கட்டிப் போட்டு நகை, பணத்தை திருடிய  குற்றவாளிகள் எட்டு பேரை போலீஸார்  கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில், .கடந்த ஜூலை 3ஆம் தேதி தனியாக இருந்த முதியோர் தம்பதிகளை கட்டி போட்டு விட்டு, சுமார் 12 லட்சம் ரூபாய் நகை மற்றும் பணம்  திருடப்பட்டது. இது குறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து, போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், சம்பவம் நடந்த வீட்டில் வேலை பார்த்த பாக்கியம் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் முதியோர் தம்பதியை கட்டிப் போட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில், திருட்டுக்கு உடந்தையாக இருந்த மஞ்சுளா, அவரது மகன் அசோக் குமார் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் கொடுத்திருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

Similar News