சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்ற அறிவுறுத்தல்
ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சிமன்றத் தலைவர்களால் கொடியேற்றப்பட வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்;
ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சிமன்றத் தலைவர்களால் கொடியேற்றம் செய்யப்பட வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75-ஆவது ஆண்டை முன்னிட்டு, 15.08.2022-ஆம் தேதி சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.மூன்றடுக்கு ஊராட்சிகளில், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு, ஊராட்சி நிர்வாகத்தில், சமத்துவம் மற்றும் சமூக நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் 15.08.2022-ஆம் தேதியன்று அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்களில் ஊராட்சிமன்றத் தலைவர்கள்; கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்.இதில், எவ்வித முரண்பாடுகள் இருத்தல் கூடாது. இதுகுறித்து, ஒவ்வொரு ஊராட்சியையும் கண்காணித்து உறுதி செய்திட சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஏற்கனவே, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவர் அல்லாத, வேறு எவரேனும் ஊராட்சிமன்ற அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றுவது தொடர் பாக ஏதும் நிகழ்வு அறிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.