காரைக்குடியில் வேளாண் கல்லூரி திறப்பு: சிவகங்கை எம்.பி பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியின் வாயிலாக வேளாண்மைக் கல்லூரியினை திறந்து வைத்தார்

Update: 2022-04-30 08:15 GMT

முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்த காரைக்குடி  செட்டிநாடு வேளாண்கல்லூரியில் குத்துவிளக்கேற்றி வைத்த சிவகங்கை எம்பி காரத்திக்சிதம்பரம்    மாவட்ட ஆட்சித்தலைவர்   ப.மதுசூதன் ரெட்டி,

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தார்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சியின் வாயிலாக, வேளாண்மைக் கல்லூரியினை திறந்து வைத்ததை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தார். கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில், அவர்களது வருவாயினை பன்மடங்கு உயர்த்திடவும், நிகர சாகுப்படிப் பரப்பினை அதிகப்படுத்தும் பொருட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். வேளாண் துறையின் எதிர்காலத் தேவைகளை மேற்கொள்ளும் பொருட்டு பல்வேறு ஆராய்ச்சி மற்றும் முக்கியத்துவம் அளித்து வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால்தான் வேளாண்துறை என்பதனை வேளாண்மை – உழவர் நலத்துறை எனப்பெயர் மாற்றப்பட்டு இத்துறையின் முக்கியத்துவம் உணரச்செய்யப்பட்டு இருந்தது. இதற்காக தனிநிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ள வேளாண் கல்லூரி மூன்றாண்டு பட்டப்படிப்பிற்கு 50 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது 47 மாணவர்கள் சேர்க்கை முடிவுற்று உள்ளது. மீதியுள்ளவர்கள் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படுவார்கள். இக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதிகளுடன் தேவையான இடவசதியுடன் வகுப்பறைகள் தற்காலிக கட்டிடத்தில் இயங்கப்படவுள்ளன. இதற்கான தனி கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி சிறப்பு அலுவலர் ஏ.வீரமணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், சாக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் எம்.சரண்யா செந்தில்நாதன், பேரூராட்சி உறுப்பினர்கள் கற்பகம், சுரேகா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினர் சொக்கலிங்கம், ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News