அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நூலகம் திறப்பு

அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள புதிய நூலகத்தில் 6,000 நூல்கள் உள்ளன

Update: 2022-04-27 12:15 GMT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய நூலகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட அரியக்குடி, அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் , அனைத்துப்பள்ளி மாணவ, மாணவிகளும் தரமான கல்வியினை கற்க வேண்டும் என்பதற்காகவும், எதிர்கால அறிவுத்தேவையினையம் கருத்தில் கொண்டு இளைய சமுதாயம் உருவாகிட வேண்டும் என்பதற்காக பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள்.

அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய நூலகம் உருவாக்கப்பட்டு, 6,000 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.பள்ளி மாணவ, மாணவியர்கள் தினந்தோறும் குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது பாடப்புத்தகங்களை தவிர்த்து பிற நூல்களை கற்க வேண்டும். ஏதேனும், நல்லப்புத்தகங்களை கற்கும் போது நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படும்.

ஒழுக்கம் தானாகவே வந்துவிடும். சில மாணவ, மாணவியர்கள் பிற செயல்களை தவிர்த்து, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திட வேண்டும். மகாத்மாகாந்தி, தமது வாழ்க்கையின் நெறிமுறைகளை சொன்னபடியே வாழ்ந்து காட்டினாரோ, அதைப்போல் நல்ல பழக்கங்கள் மாணவ, மாணவியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தனது கல்வி சார்ந்த தனது குறிக்கோள் சார்ந்த படிப்புக்களை தேர்ந்தெடுக்கும் போது அப்படிப்பின் உச்சப்பட்ச நிலை, சிறந்த கல்வி நிலையங்கள் போன்றவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்.இதன் மூலம் அந்தகல்வி நிலையங்களில் சேர்ந்து பயிலுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இதைத்தொடர்ந்து, அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் புதிய நூலகங்கள் அல்லது நூலகங்களை புதுப்பித்த பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நூலகங்ளை நல்லமுறையில் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் பி.சண்முகநாதன், ஒருங்கிணைப்பு திட்ட அலுவலர் சீதாலெட்சுமி, தலைமையாசிரியர் வி.ஜெ.பிரிட்டோ, ஊராட்சி மன்றத்தலைவர் மு.சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News