ஆரம்ப சுகாதார நிலையத்தில்,மருத்துவர்களும் செவிலியர்களும் பணியில் அலட்சியம் பொதுமக்கள் புகார்.
காரைக்குடி வெப்ப பரிசோதனை, சனிடைசர் முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு
காரைக்குடி காரைக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில்,மருத்துவர்களும் செவிலியர்களும்,பணியில் அலட்சியம் பொதுமக்கள் அலைகழிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வெப்ப பரிசோதனை, சனிடைசர் முறையாக வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை அருகே கடந்த 60 வருடத்திற்கு மேலாக இயங்கி வருகிறது MLM ஆரம்ப சுகாதார நிலையம்.இப்பகுதி பெண்களின் பிரசவத்திற்காகவும், முதலுதவி சிகிச்சைக்காகவும் இயங்கி வந்த மருத்துவமனை தற்போது, கொரானா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, பொதுமக்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர்,3 செவிலியர்கள் 5 மருத்து, இரண்டு சுகாதார பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், காலை 9 மணிக்கு கொரானா பரிசோதனை ஆரம்பிக்கப்பட வேண்டிய நிலையில்,மருத்துவர் மற்றும் பணியாளர்கள் பதினொரு மணிக்கு மேல் தான் பணிக்கு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
கொரானா பரிசோதனைக்கு வரும் பொதுமக்கள்.மேலும் வரும் பொதுமக்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படுவதில்லை என்றும், முறையாக சானிடைசர் கொடுக்கப்படுவதில்லை என்றும்,பணியில் அலட்சியம் காட்டி பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கும் பொதுமக்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் உடனடியாக பரிசோதனை செய்து அனுப்புவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்து பணி மருத்துவரிடம் விளக்கம் கேட்க முற்பட்டபோது, மருத்துவர் சந்திக்க மறுத்துவிட்ட நிலையில்.
பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் கேட்டபோது, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.