விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஹரியானா விவசாயி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்;

Update: 2021-08-28 05:29 GMT

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும் ஹரியானா மாநில விவசாயி ஜர்தார் சிங்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அச்சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஜர்தார் சிங் (40) காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்கிறார்

இவர் ஆக.1-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தனது பயணத்தை தொடங்கியவர் தமிழகத்தில் சென்னை வந்தவர் விழுப்புரம் , திருச்சி வழியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வழியாக இராமேஸ்வரம் சென்றார். இவர் தான் செல்லும் வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் இறங்கி, வேளாண்மை சட்டங்களை ஏன் ரத்து செய்ய வேண்டுமென என்பதற்கான காரணத்தை மக்களிடம் விளக்கி கூறுகிறார்

இன்னும் ஒரு வாரத்திற்குள் கன்னியாகுமரி சென்றுவிடுவதாகவும், அங்கிருந்து மீண்டும் சைக்கிளில் தனது ஊருக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News