சிவகங்கை அருகே பட்டமங்கலத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் 800 பணியாளர்கள் மூலம் 2,900 இடங்களில் தடுப்பு முகாம் நடத்தப்பட்டது;

Update: 2022-07-10 11:30 GMT

பட்டமங்கலத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், கீழபட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பட்டமங்கலத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  தொடக்கி வைத்தார்.

பின்னர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கூறியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர், பதவியேற்ற போது இருந்த அசாதாரண சூழ்நிலையில் ஏற்பட்டிருந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பற்றாக் குறையை போக்கிட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாக பற்றாக்குறை நீங்கியது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஏராளமான முகாம்களை நடத்தி கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்தி, இயல்பு நிலைக்கு தமிழகத்தினை விரைந்து மீட்டெடுத்தார்.

முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கருணாநிதி, ஒரு மாநிலத்தின் வளர்ச்சியானது கிராமத்தினை அடிப்படையாக கொண்டு அமைகிறது என்பதனை கருத்தில் கொண்டு, ஏராளமான திட்டங்களை கிராம வளர்ச்சிக்காக செயல்படுத்தினார்கள். இப்போதுள்ள வளர்ச்சிக்கு அச்சாரமாக அடித்தளமாக இருப்பது கலைஞர்உருவாக்கிய திட்டங்களால் ஏற்பட்டதாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தொய்வினை ஈடுகட்டி சரிசெய்து மீண்டும் பழைய வளர்ச்சியினை அடைய தமிழ்நாடு முதலமைச்சர் , அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். தமிழக அரசானது எவ்விதப்பாகுபாடின்றி அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாகிய வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் மட்டுமன்றி அறிவார்ந்தவர்களின் கருத்துக்களையும் கேட்டு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவிகித்தினை கடந்த ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றி அனைவரும் மகிழும் வண்ணம் ஆட்சி செய்து வருகிறார். மீதமுள்ள வாக்குறுதிகள் விரைந்து நிறைவேற்றுவார்கள். தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் 1 இலட்சம் இடங்களில் சிறப்பு முகாம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் 800 தடுப்பூசி பணியாளர்கள் மூலம் வழக்கமான தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களான 2,900 இடங்களில் தடுப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கடந்த 16.01.2021 முதல் 07.07.2022 வரை 21,66,522 நபர்களுக்கு (95 சதவிகிதம்) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியாக 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 55,828 நபர்களுக்கும், 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 39,520 நபர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட 10,20,313 நபர்கள் என 11,15,731 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை தடுப்பூசியாக 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 49,678 நபர்களுக்கும், 12 முதல் 14 வயதிற்குட்பட்ட 28,046 நபர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட 9,56,307 நபர்கள் என 10,34,031 நபாகளுக்கு (88 சதவிகிதம்) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி 10.01.2022 முதல் 16,760 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன் இல்லமல் உடன் உற்றார் உறவினர்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) எஸ்.ராம்கணேஷ், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் நாராயணன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், இளங்கோ, மேலபட்டமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ், மருத்துவர் அர்ச்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News