சிராவயல் மஞ்சு விரட்டு போட்டி : அரசு மதுபானக் கடைகள் அடைப்பு
மாவட்டத்தில் குறிப்பிட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படவுள்ளன மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்;
சிவகங்கை17.01.2023 அன்று, சிராவயல் கிராமத்தில் நடைபெறவுள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியினை முன்னிட்டு, மாவட்டத்தில் குறிப்பிட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படவுள்ளன மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், நாச்சியார்புரம் உள்வட்டம், சிராவயல் கிராமத்தில் 17.01.2023 அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவதை முன்னிட்டு, 17.01.2023 அன்று ஒருநாள் மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடை எண்கள் 7571, 7740, 7573 மற்றும் 7734 (சிராவயல்) ஆகியவைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி. தெரிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு தொடக்கத்தில் மொத்தம் 6,736 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. தமிழ்நாடு வாணிபக் கழகம். இந்த எண்ணிக்கை அடுத்த ஐந்து வருடத்தில் 40 ஆகக் குறைக்கப்பட்டு, அ.தி.மு.க ஆட்சி அமைந்த 2011-ம் ஆண்டு 6,696 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இயங்கியுள்ளன. ஜெயலலிதா தலைமையிலான அடுத்த ஐந்து வருட ஆட்சியில் 19 கடைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு தொடக்கத்தில், தமிழகத்தில் 6715 டாஸ்மாக் கடைகள் இயங்கியிருக்கின்றன. இதில் அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் மூடப்பட்ட கடைகள் போக தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.