தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கல்
சேலம் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு, தனியார் பள்ளி சார்பில், நிவாரண பொருட்களை, ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.;
சேலம் மாநகராட்சி பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பிலும், பல்வேறு சமூக அமைப்பின் சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, சேலத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி சார்பில், அரிசி மற்றும் மளிகைப்பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
இதேபோல், மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.