சேலம்: முன்தினம் இரவே வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்
சேலம் எடப்பாடியில், நேற்று இரவு 11 மணி முதலே பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்வதற்கு காத்திருந்தனர்.;

எடப்பாடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக இரவு 11 மணி முதல் காத்திருந்த பொதுமக்கள்.
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், அரசு சார்பில் பல கட்டங்களாக, தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு ஊசி பற்றாக்குறை ஏற்பட்டு 8 நாட்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா, தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாரத்தில், எட்டு சுகாதார மையங்களில் 800 தடுப்பு ஊசி செலுத்தபடுவதாக எடப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்திருந்தார். இந்த தகவலை அறிந்த பொதுமக்கள், நேற்றிரவு பதினோரு மணி முதல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை நுழைவாயிலில் திரளக் தொடங்கினர். இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து, காலையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.