நெடுங்குளம் அருகே கோழிச்சண்டை - 5 பேர் கைது; 30 டூவீலர்கள் பறிமுதல்
சேலம் மாவட்டம் நெடுங்குளம் அருகே கோழிச் சண்டை தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அடுத்த தம்பாகவுண்டனூர், நெடுங்குளம் பகுதியில் கோழி சண்டை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பூலாம்பட்டி காவல் ஆய்வாளர் பிராங்கிளின் உட்ரோ வில்சன், காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமரன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்தனர்.
அப்போது, அங்கு பணம் கட்டி கோழிக்கட்டு நடத்தியவர்களை சுற்றிவளைத்தனர். இதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் தப்பியோடிவிட்டனர். அப்போது ஒக்கிலிப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலம், ஓமலூரை சேர்ந்த ராஜ்கமல்,கோனேரிப்பட்டி பழனிசாமி, பவானியை சேர்ந்த அம்மாசி, மேட்டூரை சேர்ந்த லட்சுமிநாராயணன், ஆகிய 5 பேர் மட்டும் பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்து நான்கு சேவல்கள் ரூ2000 பணம் மற்றும் 30 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு பூலாம்பட்டி காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு தப்பி ஓடிய அவர்களை தேடி வருகின்றனர்.