எடப்பாடி உழவர் சந்தையில் சமூக இடைவெளி மிஸ்ஸிங்: கொரோனா பரவும் அபாயம்

சேலம் மாவட்டம் எடப்பாடி உழவர் சந்தையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்களால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

Update: 2021-05-11 06:45 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில்  தமிழகத்தில், 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்படுத்த மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதை தொடர்ந்து,  சேலம் மாவட்டம் எடப்பாடி நகர் பகுதிகளில் தொற்றின் தாக்கம் தெரியாமல் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சாதாரணமாக வெளியில் சென்று வருகின்றனர்.

மேலும் இதே போன்று இன்று அதிகாலை உழவர் சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக சென்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனை உடனடியாக சுகாதாரத்துறை மற்றும் நகராட்சியினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News