மரம் விழுந்து ஆட்டோ நசுங்கியது

மரம் முறிந்து விழுந்து ஆட்டோ நசுங்கியது.;

Update: 2021-04-03 09:30 GMT

தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ நசுங்கி சேதமடைந்தது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அமரவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் கண்ணன் (45) இவர் இன்று காலை தனது ஆட்டோவில் கிராமத்திலிருந்து தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பயணிகளை சவாரி ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். உள்ளே பயணிகளை இறக்கிவிட்டு மருத்துவமனை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த போது அங்குள்ள மரமொன்று திடீரென ஆட்டோ மீது முறிந்து விழுந்ததில் ஆட்டோ முற்றிலும் நசுங்கி சேதமடைந்தது. இதனையடுத்து அறுவை இயந்திரம் கொண்டு அறுத்து மரத்தை அகற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியிலும் மருத்துவமனை வளாகத்திலும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News