தொண்டியில் கொரோனா விதி மீறிய வங்கிக்கு 5ஆயிரம் அபராதம்

தொண்டியில் கொரோனா விதிகளை மீறிய வங்கிக்கு கோட்டாட்சியர் சேக் மன்சூர் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Update: 2021-08-07 17:29 GMT

தொண்டியில் வங்கியில் கொரோனா விதி மீறல் குறித்து ஆய்வு நடத்திய கோட்டாட்சியர் சேக் மன்சூர்.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

பின்னர் கடைவீதியில் உள்ள கடைகள், காய்கறி மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கோட்டாட்சியர் வழங்கி தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது முகக்கவசம் அணியாத சுமார் 5க்கு மேற்பட்ட கடைகளுக்கும், 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து கனரா வங்கிக்கு சென்ற கோட்டாட்சியர் அங்கு அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நடிவடிக்கைகளை பின்பற்றாததால் வங்கிக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்து எச்சரித்தார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News