திருவாடானை அருகே நகை பட்டறையின் மேற்கூரையை பிரித்து தங்க நகைகள் திருட்டு

திருவாடானை அருகே நகை பட்டறையின் ஓட்டை பிரித்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்க நகைகள் திருடுபோனது;

Update: 2022-04-28 17:00 GMT

திருவாடானை அருகே நகை பட்டறையின் ஓட்டை பிரித்து வெள்ளி மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது

திருவாடானை அருகே நகை பட்டறையின் ஓட்டை பிரித்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்க நகைகள் கொள்ளை.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்பி பட்டினத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் மகன் செல்வம் (50) எஸ்.பி.பட்டிணத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வரும் இவர் சொந்தமாக அதே பகுதியில் நகை பட்டறை ஒன்றும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை தனது நகை பட்டறையை பூட்டிவிட்டு வங்கிக்குச் சென்றுள்ளார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் நகை பட்டறை ஓட்டை பிரித்து உள்ளே இருந்த ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மதியம் வங்கியில் இருந்து பட்டறைக்கு திரும்பிய செல்வம் கடையை திறந்து பார்த்தபோது மேலே ஓடு பிரிக்கப்பட்டு உள்ளே இருந்த நகைகள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி.பட்டிணம் போலீஸார் கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News