இராமநாதபுரம் அருகே விசாரணைக்கு சென்ற சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு

இராமநாதபுரம் அருகே விசாரணைக்கு சென்ற சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வனுக்கு அரிவாள் வெட்டு.

Update: 2021-10-11 10:01 GMT

பைல் படம்.

விசாரணைக்கு சென்ற ஆர்.எஸ்.மங்கலம் சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வனுக்கு அரிவாள் வெட்டு.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அனிச்சகுடி கிராமத்தில் காளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தரிசனத்திற்கு வருவோரிடம் ஒருவர் தகராறு செய்து வருவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிபடையில் தகராறில் ஈடுபட்ட மலைராஜ் என்பவரை தேடி அனிச்சகுடியில் உள்ள அவரது வீட்டுக்கு ஆர்.எஸ். மங்கலம் சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், ஏட்டு கண்ணன் ஆகியோர் சென்றனர்.

அப்போது மதுபோதையில் இருந்த மலைராஜ், சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வனின் இடது காதுக்கு மேல் தலையில் அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த தமிழ்ச்செல்வனை போலீசார் மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மலைராஜை ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கைது செய்தனர். சிகிச்சை பெற்று வரும் தமிழ்ச்செல்வனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News