ஓமன் நாட்டில் இறந்த மீனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு மனைவிகள்மனு
ஓமன் நாட்டில் இறந்த மீனவர்களுக்கு இறப்பு சான்றிதழ், நிவாரணம் கேட்டு மனைவிகள் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
ஓமன் நாட்டில் இறந்த மீனவர்களுக்கு இறப்பு சான்றிதழ், நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் இறந்த மீனவர்களின் மனைவிகள் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கார்மேகம், காசிலிங்கம், ராமநாதன், மற்றும் காசிலிங்கம் ஆகிய நான்கு மீனவர்களும் ஓமன் நாட்டில் மீன்பிடி ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கடல் பகுதியில் திடீரென ஏற்பட்ட புயலில் சிக்கி 4 மீனவர்களும் உயிரிழந்துள்ளனர். இதில் கார்மேகம், காசிலிங்கம் இருவரது உடல்கள் மட்டும் பல நாட்களுக்கு பின் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற இருவரின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இறப்பு சான்றிதழ் கிடைக்காததால், இவர்களது குடும்பத்திற்கு அரசு சார்பில் இதுவரை எந்த ஒரு நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை. உடனடியாக இறந்த மீனவர் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு தொகை மற்றும் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும், இருவருக்கும் இறப்பு சான்றித்ழ் வழங்கிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.